

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 60,115 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் நேற்றுமுன்தினம் 929 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,087 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,78,458 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் 1,24,736 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,744 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 1,19,827 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 14,681 பேர் இறந்துள்ளனர்.
ஜெர்மனியில் 91,159 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,275 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 65,202 பேர்வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 6,520 பேர் இறந்துள்ளனர். ஈரானில் 53,183 பேரை வைரஸை தொற்றியுள்ளது. 3,452 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் நேற்று முன்தினம் 708 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 4,313 ஆகஉயர்ந்துள்ளது. புதிதாக 3,735 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,903 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கியில் 20921, சுவிட்சர்லாந்தில் 20278, பெல்ஜியத்தில் 16770, நெதர்லாந்தில் 15821, கனடாவில் 12437, ஆஸ்திரியாவில் 11781, தென்கொரியாவில் 10062பேர் என உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 60,115 பேர் உயிரிழந்துள்ளனர்.