

இத்தாலியில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் கோவிட் - 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு புதிதாக 43 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இக்காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆகப் பதிவாகியுள்ளது.
சீனாவில் கரோனாவில் பலி எண்ணிக்கை 3,042ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்து கரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் உயிர் பலி ஏற்பட்டுள்ள நாடாக இத்தாலி மாறியுள்ளது.
உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுதும் சீனாவுக்கு வெளியே கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு 17% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமான கோவிட் காய்ச்சலால தென் கொரியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.