மூளை அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண்

மூளை அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண்
Updated on
1 min read

தன் மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது ஒரு பெண் வயலின் வாசித்த நெகிழ்ச்சியான சம்பவம் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

ஆப்ரேஷன் அறையில் டாக்மர் டர்னர் (53), வயலினை இசைக்க, மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்த புற்றுநோய்க் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

டங்மர் டர்னர் அறுவை சிகிச்சையின்போது தனது வயலின் வாசிக்கும் திறனை இழந்து விடாமல் இருக்க, மருத்துவர்கள் இந்த யோசனையை அவருக்கு வழங்கினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, “டங்மருக்கு இந்த வயலின் எவ்வளவு முக்கியமானது என்று எங்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவரது மூளை நுட்பமான பகுதிகளில் செயல்படுவதை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை வயலின் வாசிக்க அனுமதித்தோம்” என்றார்.

டர்னர் கூறும்போது, “வயலின் எனது கனவு. நான் எனது 10 வயதிலிருந்து வயலினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் வயலின் வாசிக்கும் திறனை இழப்பது என்பது மனமுடையும் செய்தி என்பதால் மருத்துவர்கள் எனது கவலையை உணர்ந்து கொண்டார்கள்” என்றார்.

தவறவீடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in