பயிர் காப்பீட்டுக்கு பணம் செலுத்த மனமில்லையா? - மத்திய அரசுக்கு சிதம்பரம் கண்டனம்

பயிர் காப்பீட்டுக்கு பணம் செலுத்த மனமில்லையா? - மத்திய அரசுக்கு சிதம்பரம் கண்டனம்
Updated on
1 min read

பயிர் காப்பீட்டு திட்டத்தை தேவைப்பட்டால் மட்டும் விவசாயிகள் ஏற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பிற்போக்குத்தனமான நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘பாஜக அரசின் தவறான கொள்கைக்கு மற்றுமொரு உதாரணம் நிகழ்ந்துள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் மத்திய அரசு காட்டும் அலட்சியம் விவசாயிகளுக்கு எதிரான செயல். புதிய காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய லாபம் இன்றி தவிக்கிறார்கள். அவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டால் காப்பீடு மட்டுமே கைகொடுக்கிறது. அதையும் விருப்பத்திற்கு விட்டு விடும் பாஜக அரசின் எண்ணம் தவறானது.

பயிர் காப்பீட்டுக்கு மத்தய அரசு தனது பங்கை செலுத்த மனமில்லாத நிலையை காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது. பயிர் செய்யும் நிலப்பகுதி அளவு குறைந்து வரும் நிலையில் காப்பீடு இல்லாமல் போனால் விவசாய உற்பத்தி மேலும் குறையவே வழி வகுக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in