

பாகிஸ்தானில் நச்சு வாயு கசிந்ததில் 6 பேர் பலியாயினர். பலர் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கராட்சி துறைமுகத்தில் கப்பலில் ரசாயன சரக்குகளை ஏற்றும்போது நச்சு வாயு கசிந்தது. இதில் அப்பணியில் உருந்த 6 பேர் பலியாயினர். பலர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் சுவாசப் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.
நச்சு வாயு கசிந்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தவறவீடாதீர்