சிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலியாயினர்.

இதுகுறித்து பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் போர் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறும்போது, “வடக்கு சிரியாவில் டமாஸ்கஸுக்கு அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அவர்களின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது..

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடு இரவில் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் சிரியா சார்பில் நடத்தப்பட்டது என்று சிரியா தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தவறவீடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in