

சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 564 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில், ”சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 564 -ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர்.
28,018 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் சுமார் 12,000-க்கும் அதிகமான மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வூஹன் நகரிலிருந்து தங்கள் நாட்டு மக்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தவறவீடாதீர்..!