

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நடக்கும் சண்டை காரணமாக கடந்த இரு மாதங்களில் சுமார் 50,000 பேர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “சிரியாவில் போர் நடக்கும் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டைத் தளர்த்த சிரிய அரசுப் படைகள் ரஷ்யப் படைகளுடன் இணைந்து நடத்திய தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப்பில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.
சிரியப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் துருக்கி போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
தவறவிடாதீர்!