இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்: குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்

இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்: குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்
Updated on
1 min read

நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ.

ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவை கொண்டாடப்படுகிறது. இதில்சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ அழைக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி இந்தியா வரும் பிரேசில் அதிபர் அங்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் இந்தியா - பிரேசில் இடையே வர்த்தகம்,அறிவியல், தொழில் நுட்பம் என இரு நாட்டு உறவு முன்னேற்றம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

மேலும் இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பிரேசில் அதிபர் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்தை சந்திக்க உள்ளார்.

ஜெய்ர் போல்சோனரோ உடன் பிரேசிலின்ம் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தியா வரவுள்ளனர்.பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in