கிரீட் தீவில் நிலநடுக்கம்

கிரீட் தீவில் நிலநடுக்கம்

Published on

கீரிஸ் நாட்டின் கிரீட் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம், “கீரிஸில் உள்ள கிரீட் தீவின் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் வடமேற்கில் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலிகஸ்ரோ கிராமத்தில் உருவானது. இதன் ஆழம் 35 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in