இராக்கில் தொடரும் வன்முறை: பிரதமர் பதவியில் இருந்து அப்துல் மஹ்தி விலகல்

இராக்கில் தொடரும் வன்முறை: பிரதமர் பதவியில் இருந்து அப்துல் மஹ்தி விலகல்
Updated on
1 min read

இராக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார் அப்துல் மஹ்தி.

இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும் இராக்கில் நடக்கும் தொடர் கலவரங்கள் குறித்து ஐ. நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்தரெஸ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இராக்கில் நடக்கும் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி தெரிவித்துள்ளார்.

இராக் அதிபர் அதில் அப்துல் மஹ்தி

வெள்ளிக்கிழமை அப்துல் மஹ்தி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாக அவரது அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக அப்துல் மஹ்தியின் ராஜினாமா எப்போது ஏற்கப்படுகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in