சிரியாவில் கார் குண்டுவெடிப்பு

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு
Updated on
1 min read

சிரியாவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டெல் அபியாட் நகரில் துருக்கி எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு காரணமாக கட்டிடங்களும் பாதிப்படைந்தன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தினார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

சனிக்கிழமை டெல் அபியாட் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாகினர். 29 பேர் காயமடைந்தனர்.

சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்து படையினர் பின்வாங்கி உள்ளனர். இந்நிலையில் துருக்கி - சிரியா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in