பாதுகாப்பான நகரம் பட்டியலில் மும்பை, டெல்லி

பாதுகாப்பான நகரம் பட்டியலில் மும்பை, டெல்லி
Updated on
1 min read

சிங்கப்பூர்

உலகின் பாதுகாப்பான நகரம் குறித்த மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்இசி கார்ப்பரேஷன் என்ற ஐ.டி. நிறுவனம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. இதில் தனி நபர் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உட்பட நகரங்களில் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

தனி நபர், நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் களின்படி பல நாடுகளைச் சேர்ந்த 60 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. அதன்படி, உலகிலேயே பாதுகாப் பான நகரமாக ஜப்பானின் டோக் கியோ நகரம் விளங்குவதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் மும்பை 37-வது இடத்திலும் டெல்லி 41-து இடத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு, நகர்ப்புற வாழ்க்கை உட்பட பல அம்சங் களை ஆராய்ந்து இந்த பட்டி யலை தயாரித்ததாக மாநாட்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in