வங்கதேச போர்க்குற்ற வழக்கில் ஜமாத் செயலரின் மரண தண்டனை உறுதியானது

வங்கதேச போர்க்குற்ற வழக்கில் ஜமாத் செயலரின் மரண தண்டனை உறுதியானது
Updated on: 
1 min read

வங்கதேச சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச்செயலாள ருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதி மன்றம் நேற்று உறுதி செய்தது.

ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளரான அலி அசன் முகமது முஜாஹித் (67), 1971-ல் வங்கதேச சுதந்திரப் போரை ஒடுக்குவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தால் உருவாக்கப்பட்ட படையின் கமாண்டராக செயல்பட்டு பலரை கொன்றார்.

இதையடுத்து, அவர் மீது போர்க்குற்றம் புரிந்த தாக வழக்கு பதிவு செய்யப்பட்டி ருந்தது. இந்த வழக்கை விசாரித்த வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கடந்த 2013-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஜாஹித் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் முஜாஹித்தின் மரண தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 15 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடியும். இதன்படி, மறு ஆய்வு மனு செய்யப் போவதாக முஜாஹித் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in