வடகிழக்கு ஆப்கானில் நிலச்சரிவு: 52 பேர் பலி

வடகிழக்கு ஆப்கானில் நிலச்சரிவு: 52 பேர் பலி
Updated on
1 min read

வடகிழக்கு ஆப்கானில் உள்ள பதக்‌ஷன் அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 52 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கான் - தாஜிகிஸ்தான் எல்லையில் உள்ள கவான் மாவட்டத்தில் இன்று காலை இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக மாகாண கவர்னர் ஷா வாலியுல்லா அதீப் என்பவர் தெரிவித்தார்.

இப்போது அந்தப் பகுதிக்கு செல்லும் சாலை பனிச்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளதால் ஹெலிகாப்டரில்தான் செல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in