ஆப்​கனின் காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஆப்​கனின் காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
Updated on
1 min read

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை மீது பாகிஸ்​தான் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யதில் சுமார் 400 பேர் இறந்​த​தாக​ தலி​பான் அரசு கூறி​யுள்​ளது.

பாகிஸ்​தானுக்​கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீப கால​மாக மோதல் நிலவி வரு​கிறது. பாகிஸ்​தானில் தாக்​குதல் நடத்​தும் தீவிர​வாத அமைப்பு​களை கட்​டுப்​படுத்​து​மாறு தலி​பான் அரசை பாகிஸ்தான் வலி​யுறுத்​துகிறது. ஆனால் தீவிர​வாத அமைப்புகளுக்​கும் தங்​களுக்​கும் எவ்​வித தொடர்​பும் இல்லை என தலி​பான் அரசு மறுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் காபூல் நகரில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை மீது நேற்று முன்​தினம் இரவு தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

இது குறித்து ஆப்​கானிஸ்​தான் அரசின் துணை செய்​தித் தொடர்பாளர் ஹம்​துல்லா ஃபித்​ரத் நேற்று கூறுகை​யில், ”காபூல் நகரில் போதைப்​பொருள் மறு​வாழ்வு மருத்​து​வ​மனை மீது திங்கட்கிழமை இரவு சுமார் 9 மணி​யள​வில் பாகிஸ்​தான் வான்வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், 2,000 படுக்​கைகள் கொண்ட அந்த மருத்​து​வ​மனை​யின் பெரும் பகுதி இடிந்​த​தில் சுமார் 400 பேர் உயி​ரிழந்​தனர். சுமார் 250 பேர் காயம் அடைந்தனர்” என்​றார்.

ஆப்​கானிஸ்​தான் அரசின் செய்​தித் தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்​குதலை கண்​டித்​துள்​ளார். இது மனிதகுலத்துக்கு எதி​ரான குற்​றம் என்​றும் அவர் சாடி​யுள்​ளார்.

இது குறித்து பாகிஸ்​தானின் தகவல் துறை அமைச்​சர் அத்தாவுல்லா தாரார் கூறுகை​யில், ‘‘ஆப்​கானிஸ்​தானின் காபூல் மற்​றும் கிழக்கு மாகாண​மான நங்​கர்​ஹாரில் உள்ள ராணுவத் தளங்​களை குறி​வைத்து பாகிஸ்​தான் ராணுவம் துல்​லிய​மான வான்​வழித் தாக்​குதல்​களை நடத்​தி​யது. இதில் காபூலில் 2 இடங்களில் தொழில்​நுட்ப ஆதரவு உள்​கட்​டமைப்பு மற்​றும் வெடி மருந்து சேமிப்பு வசதி​கள் அழிக்​கப்​பட்​டன. காபூலில் எந்த மருத்து​வ​மனை​யும் குறிவைக்​கப்​பட​வில்​லை. தலி​பான்​ குற்றச்சாட்​டு ஆதா​ரமற்​றது” என்​றார்​.

இந்தியா கண்டனம்: இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ”இது ஒரு கோழைத்தனமான, மனசாட்சியற்ற வன்முறைச் செயல். ஒரு படுகொலையை ராணுவ நடவடிக்கையாக பாகிஸ்தான் சித்தரிக்க முயன்று வருகிறது” என்று இந்தியா கூறியுள்ளது.

ஆப்​கனின் காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
ஈரானின் 2-வது மிகப் பெரிய தலைவர் அலி லாரிஜானி, மூத்த தளபதி சுலைமானி உயிரிழப்பு: இஸ்ரேல் பிரதமர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in