

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் இரவு உணவுக்கு மாமிசம் சமைக்காமல் வெஜிடேரியன் உணவு சமைத்த தன் மனைவியை அடித்தே கொன்றுள்ளார். இந்த வழக்கு புரூக்ளின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
75 வயதாகும் நூர் ஹுசைன் என்ற இந்த நபர் 2011ஆம் ஆண்டு நாசர் ஹுசைன் என்ற தனது 66 வயது மனைவியை அடித்தே கொலை செய்துள்ளார்.
கொலையாளி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கொலை செய்யும் எண்ணத்துடன் அடிக்கவில்லை என்று வாதாடியுள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் மனைவியை அடிப்பது சர்வ சாதாரணமான ஒன்று என்றும், அவர்களது பண்பாட்டில் மனைவியை அடிக்கும் உரிமையும், அவரை திருத்தும் உரிமையும் கணவனுக்கு உள்ளது என்றும் இவர் தனது விசித்திர வாதத்தை முன் வைத்துள்ளார்.
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, "மனைவியை ஒழுக்கப்படுத்தும், திருத்தும் எண்ணமெல்லாம் இவருக்கு இல்லை தலையில் அடித்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது கொலைவெறித் தாக்குதலே என்று வாதாடியுள்ளார்.
மேலும் அண்டை வீட்டுக்காரகள் சாட்சியங்களிலும் காலங்காலமாக மனைவியை தாறுமாறாக இவர் அடித்துக் கொடுமை படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளனர்.
இதனால் கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.