

அல்-காய்தாவின் ராணுவத் தளபதியை சிரிய ராணுவப் படை கொன்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அல்-காய்தா முக்கிய ராணுவத் தளபதி அபு ஹமாம் அல்-ஷமியை வான்வழித் தாக்குதல் நடத்தி சிரிய ராணுவம் கொன்றதாக தகவல் வெளியானது. இதனை ராணுவம் தெரிவித்ததாக தலைநகர் சனாவை மையமாகக் கொண்ட சிரியா நாட்டு செய்திச் சேனல் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த விரிவான அறிக்கையை ராணுவம் வெளியிடவில்லை.