​பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்​தில் 33 குழந்தைகள் உயிரிழப்பு

படுகாயமடைந்த 19 பேர் மருத்துவமனை​யில் அனுமதி
​பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்​தில் 33 குழந்தைகள் உயிரிழப்பு
Updated on: 
1 min read

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்தின் தலைநக​ரான பெஷாபூரில் அடர்த்​தி​யான குடியிருப்​புப் பகு​தி​யான திர் காலனி உள்​ளது. அங்கு பள்ளி ஒன்றின் மேற்​கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்​தது. இந்த கோர விபத்தில் 13 வயதுக்கு உட்​பட்ட 33 குழந்​தைகள், ஒரு பெண் ஆசிரியர் என 34 பேர் உயி​ரிழந்​தனர்.

மேலும், 19-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்து மருத்துவமனையில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் பலரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது. பெற்​றோர் தங்​களது குழந்​தைகளின் நிலையை அறிய பள்ளி மற்​றும் மருத்​து​வ​மனை வளாகத்​தில் கண்​ணீருடன் குவிந்​தனர். பள்​ளி​யின் உரிமையாளரை காவல்துறை கைது செய்​துள்​ளது. பல குழந்தைகள் இன்​னும் இடி​பாடு​களுக்கு அடி​யில் சிக்கியிருக்கலாம் என்​றும், அவர்​களை மீட்​கும் பணி தீவிர​மாக நடந்து வரு​வ​தாக​வும் அவசர உதவிப் பிரிவு செய்​தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி தெரி​வித்​தார். பள்ளி கட்​டிடம் மிகவும் பலவீன​மாக இருந்​த​தாகவும், விபத்​துக்​கான காரணம் குறித்து வி​சா​ரணை நடப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

​பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்​தில் 33 குழந்தைகள் உயிரிழப்பு
அமெரிக்கா​​வில் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதி​கரித்து துப்பாக்கியால் சுட முயற்சி: பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in