அமெரிக்கா​​வில் இந்தியர்கள் மீதான வெறுப்பு அதி​கரித்து துப்பாக்கியால் சுட முயற்சி: பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

இடது: அலெக்​ஸான்ட்​ரோஸ் பபோ​ராக்​கிஸ் | வலது: ரந்தீர் ஜெய்ஸ்வால்

இடது: அலெக்​ஸான்ட்​ரோஸ் பபோ​ராக்​கிஸ் | வலது: ரந்தீர் ஜெய்ஸ்வால்

Updated on: 
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு கோயி​லில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சம்​பவத்தை தொடர்ந்​து, அங்கு இந்தியர்கள் மீதான வெறுப்பு அதி​கரித்து வரு​வ​தாக மத்திய அரசு கவலை தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்கா​​வின் இல்​லி​னாய்ஸ் மாகாணம் ஆரோ​ரா​வில் உள்ள ஒரு இந்து கோயி​லில் துப்​பாக்​கிச் சூடு நடத்த முயற்​சித்​த​தாக 19 வயதான அலெக்​ஸான்ட்​ரோஸ் பபோ​ராக்​கிஸ் என்​பவரை கடந்த 11-ம் தேதி போலீ​ஸார் கைது செய்​தனர். துப்​பாக்கி செயலிழப்பு நவீன துப்​பாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட தோட்​டாக்​கள் மற்​றும் உடல் கவசத்​துடன் கோயிலுக்​குச் சென்று தாக்​குதல் நடத்த அவர் திட்டமிட்ட நிலை​யில், திடீரென துப்​பாக்கி செயலிழந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் பெரும் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது. பபோ​ராக்​கிஸ் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில், இந்த சம்​பவம் குறித்து இந்​தியா கவலை தெரிவித்ததுடன், முழு​மை​யான விசா​ரணை நடத்தி இந்​திய வம்சாவளியினரின் பாது​காப்பை உறுதி செய்​யு​மாறு அமெரிக்க அதிகாரிகளை வலி​யுறுத்தி உள்​ளது.

வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுபற்றி கூறிய​தாவது: இந்​திய வம்சாவளியினருக்கு எதி​ரான வன்​முறையை​யும், இந்து எதிர்ப்பை​யும் கொண்​ட​தாகக் கூறப்​படும் இந்த சதித் திட்​டத்​தின் தன்மை மிக​வும் கவலைக்​குரியது.

இந்​தச் சம்​பவம் அமெரிக்​கா​வில் அதி​கரித்து வரும் இனவெறி மனப்​பான்மை மற்​றும் இந்​தியா எதிர்ப்பு வெறுப்​புச் செயல்​கள் குறித்த கவலைகளை மேலும் அதி​கரித்​துள்​ளது. இந்​தியர்களின் பாது​காப்பை உறுதி செய்ய தீர்​மான​மான நடவடிக்கை எடுக்கப்பட வேண்​டும். இந்த விவ​காரம் குறித்து அமெரிக்க அதிகாரி​கள் முழு​மை​யாக விசா​ரித்​து, பொறுப்​பானவர்​களை சட்டத்​தின் முன் நிறுத்​தி, இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடைபெறாத வகை​யில் அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுப்பார்​கள் என எதிர்​பார்க்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>இடது:&nbsp;அலெக்​ஸான்ட்​ரோஸ் பபோ​ராக்​கிஸ் | வலது:&nbsp;ரந்தீர் ஜெய்ஸ்வால்</p></div>
“நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட நாங்கள் விரும்புவதில் தவறு ஏதுமில்லை” - பிரசாந்த் பூஷண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in