தென்கொரியாவில் 100 கார்கள் மோதல்: 2 பேர் பலி; 65 பேர் படுகாயம்

தென்கொரியாவில் 100 கார்கள் மோதல்: 2 பேர் பலி; 65 பேர் படுகாயம்
Updated on
1 min read

தென்கொரிய தலைநகர் சியோல் அருகே மூடுபனி காரணமாக சுமார் 100 கார்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து நேரிட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 65-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைதனர்.

சியோல் அருகே இன்சியான் சர்வதேச விமான நிலையம் உள் ளது. சியோல் நகரையும் விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட நெடுஞ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சியோலில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக நேற்று காலையில் நெடுஞ்சாலையின் பிரதான பாலத்தில் இரண்டு கார்கள் மோதின.

இதைத் தொடர்ந்து இருபுறமும் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி நொறுங்கின. ஒட்டுமொத்தமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட கார்கள் சம்பவ இடத்தில் முட்டி மோதின. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். 65-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in