என்விடியா சிஇஓ போட்டியில் 3 இந்திய வம்சாவளியினர்

என்விடியா சிஇஓ போட்டியில் 3 இந்திய வம்சாவளியினர்
Updated on: 
1 min read

வாஷிங்டன்: என்விடியா நிறு​வனத்​தின் நிரந்​தர சிஇஓ பதவிக்கான போட்​டி​யில் 3 இந்திய வம்சாவளியினர் இருப்​ப​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

உல​கின் முன்​னணி சிப் தயாரிப்பு நிறு​வனமான என்​வி​டி​யாவின் தலை​மைச் செயல் அதி​காரி (சிஇஓ) ஜென்​சன் ஹுவாங், ராஜினாமா செய்​ததைத் தொடர்ந்து, நிறு​வனத்​தின் தலைமை நிதி அதி​காரியான கோலெட் கிரெஸ் இடைக்​கால சிஇஓ-ஆக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், என்​வி​டியா நிறு​வனத்​தின் நிரந்​தர சிஇஓ பத​விக்கு அமெரிக்​கா​வின் முன்​னணி நிறு​வனங்​களில் தலைமை நிர்​வாக அதி​காரியாக பணி​யாற்றி வரும் சஞ்​சய் மெஹ்​ரோத்ரா, நிகேஷ் அரோரா மற்​றும் தாமஸ் குரியன் ஆகிய 3 இந்​திய வம்சாவளியினர் பெயர் பரிசீலிக்​கப்​பட்டு வரு​வ​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

சஞ்​சய் மெஹ்​ரோத்ரா

மெமரி சிப் தயாரிப்பு நிறு​வனமான மைக்​ரானின் தலைமை நிர்வாகி​யான சஞ்​சய் மெஹ்​ரோத்ரா, இத்​துறை​யில் 40 ஆண்டுகளுக்​கும் மேலான அனுபவம் கொண்​ட​வர். மைக்​ரான் தயாரிப்​பு​களைப் பயன்​படுத்​தும் என்​வி​டியா நிறு​வனத்​துடன் இவர் நெருக்​க​மாகப் பணி​யாற்​றியுள்​ளார். 2017-ல் மைக்​ரானில் சேரு​வதற்கு முன்பு, மெஹ்​ரோத்ரா 1988-ல் ஃபிளாஷ் மெமரி முன்னோடி​யான சான்​டிஸ்க் நிறு​வனத்தை இணைந்து நிறுவினார்.

நிகேஷ் அரோரா

பாலோ ஆல்டோ நெட்​வொர்க்ஸ் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி நிகேஷ் அரோரா. கூகுள் நிறு​வனத்​தில் 10 ஆண்டு காலம் பணிபுரிந்​துள்​ளார்.

தாமஸ் குரியன்

கூகுள் கிளவுட் தலை​மைச் செயல் அதி​காரியான தாமஸ் குரியன், கூகுளில், கிளவுட் உள்​கட்​டமைப்பு, நிறு​வன மென்​பொருள் மற்றும் செயற்கை நுண்​ணறிவு சேவை​களை மேற்பார்வையிடுகிறார். மேலும் 8 பேர் பரிசீலனை​யில் உள்​ளனர்.

ரூ.47 லட்​சம் கோடி இழப்பு

என்விடியா பங்​கு​கள் வரலாறு காணாத அளவில் சரிவை கண்டுள்ளது. ஜென்​சென் விவகாரம் கிளம்​பியது முதல் நேற்று வரை அந்த நிறு​வனத்​தின் சந்தை மதிப்பு மட்​டும் 490 பில்​லியன் டாலர் (சுமார் ரூ.47 லட்​சம் கோடி) சரிந்​துள்​ளது. இத​னால் அந்த நிறு​வன பங்​கு​களில் முதலீடு செய்​திருந்​தவர்​கள், பெரும் சோகத்தில் மூழ்​கி​யுள்​ளனர்.

என்விடியா சிஇஓ போட்டியில் 3 இந்திய வம்சாவளியினர்
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு

X