

விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அதிபர் சிறிசேனாவின் செய்தித் தொடர் பாளர் ரஜிதா சேனாரத்னே கூறிய போது, குமரன் பத்மநாதன் தப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரதிநிதியாக செயல் பட்ட பத்மநாதன், அந்த அமைப்புக்காக ஆயுதங்களை கொள்முதல் செய்து வந்தார். ராஜபக்ச ஆட்சியின்போது மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அண்மைகாலம் வரை கிளிநொச்சியில் சிறார் காப்பகம் நடத்தி வந்த அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இலங்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளில் குமரன் பத்மநாதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.