

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஈபிள் கோபுரத்துக்கு ஆட்டு மந்தைகளை அனுப்பி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
ஓநாய்களின் தாக்குதலால் தங்கள் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஈபிள் கோபுரத்துக்கு தங்கள் ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் விலங்குகள் நல அமைப்பினர் ஓநாய்களை அழிக்கக் கூடாது என்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகழ் பெற்ற சுற்றுலா இடமான ஈபிள் கோபுர பகுதியில் ஆட்டு மந்தைகள் வலம் வந்தது வித்தியாசமான காட்சியாக அமைந்தது.
ஆண்டுதோறும் சுமார் 1000 ஆடுகள் ஓநாய்களுக்கு இரையாகின் றன. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஓநாய்களிடம் இருந்து தங்கள் ஆடுகளை காப்பாற்ற புதிய செயல் திட்டம் வகுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.