

அன்னை தெரசாவின் 19-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடு கள் தலைமையகத்தில் பிரத்தியேக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னை தெரசாவின் வாழ்க் கையையும், ஆதரவற்றோருக்காக அவர் ஆற்றிய அரும் பணிகளையும் விவரிக்கும் வகையில் செப்டம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை, நடைபெறும் இக்கண்காட்சியை ஐநாவுக்கான வாடிகன் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் மற்றும் ஏடிஎஃப் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இதுகுறித்து, ஏடிஎஃப் இன்டர்நேஷனல் அமைப்பின் செயல் இயக்குனர் டவுக் நேபியர் வெளியிட்ட அறிக்கையில்,
‘அன்னை தெரசாவின் ஈடு இணையற்ற தொண்டுகளை உலகுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப் படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 4-ம் தேதி வாடிகனில் நடைபெறும் விழாவில் அன்னை தெரசாவுக்கு, போப் பிரான்சிஸ், புனிதர் பட்டம் அறிவிக்க உள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி அன்னை தெரசாவின் நினைவு நாளாகும்.