

உக்ரைனில் நிலவும் உள்நாட்டுக் குழப்பத்துக்கு தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அதிபர் விக்டர் யானுகோவிச் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போலீஸாருக்கும் போராட்டக்காரர் களும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ள னர். 580 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போலீஸார், பாதுகாப்புப் படையினரை திரும்பக் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச் சர்கள், அதிபர் விக்டர் யானுகோவிச்சை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் அடுத்தகட்டமாக வெள்ளிக்கிழமை உக்ரைனின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் களுடன் அதிபர் விக்டர் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினார். அப்போது அதிபர் பதவிக்கான அதிகாரத்தைக் குறைத்துக் கொள்ளவும் அதிபர் தேர்தலை விரைந்து நடத்தவும் உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக அதிபர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்கள் வெளியிடப்பட வில்லை. இந்தத் தகவலை எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதால் கடந்த சில நாள்களாக போர்க்களமாக காட்சி யளித்த தலைநகர் கீவ், வெள்ளிக் கிழமை அமைதியாகக் காணப்பட் டது. எனினும் சில இடங்களில் சிறிய அளவில் வன்முறைகள் ஏற்பட்ட தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக அதிபர் விக்டர் யானுகோவிச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நாட்டின் கிழக்குப் பகுதி மக்கள் ஆதரவாக உள்ளனர். ஆனால் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக உறவை ஏற்படுத்தக் கோரி தற்போது போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையால் கடந்த 3 மாதங்களாக உக்ரைனில் பதற்றம் நிலவுகிறது.