சிரியா பேச்சுவார்த்தையில் வாடிகன்

சிரியா பேச்சுவார்த்தையில் வாடிகன்
Updated on
1 min read

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் புதன்கிழமை தொடங்கியுள்ள சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வாடிகன் தனது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளது.

சிரியாவில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தியதுடன், பிரச் சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், ஐ.நாவுக்கான வாடிகன் பிரதிநிதி மான்சிக்னார் சில்வனோ டோமாசி மற்றும் வாடிகன் வெளியுறவுச் செயலக அதிகாரி ஆல்பெர்ட்டோ ஆர்டெகா மார்டின் ஆகியோர் ஜெனீவா அமைதிப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என வாடிகன் செய்தித் தொடர்பாளர் ஃபெடெரிக்கோ லொம்பார்டி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in