பாக். பிரதமரின் சகோதரரிடம் விசாரணை

பாக். பிரதமரின் சகோதரரிடம் விசாரணை

Published on

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், கூட்டு விசாரணைக் குழு முன்பு நேற்று ஆஜரானார்.

கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான ‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் நவாஸ் ஷெரீப் அவரது குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி 1990-களில் நவாஸ் பிரதமராக இருந்தபோது வெளிநாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூட்டு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. கடந்த 15-ம் தேதி பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டு விசாரணைக் குழு முன்பு ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நவாஸின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கூட்டு விசாரணைக் குழு முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in