ஆபாசம், வன்முறைக்கு விளக்கம் என்ன?- ஆட்சேபனைக்குரிய கருத்துகள் எவை? முகநூல் பயன்படுத்துவோர் சொல்லலாம்

ஆபாசம், வன்முறைக்கு விளக்கம் என்ன?-  ஆட்சேபனைக்குரிய கருத்துகள் எவை? முகநூல் பயன்படுத்துவோர் சொல்லலாம்
Updated on
1 min read

ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பேஸ்புக் பயன்படுத்துவோர் விளக்கம் அளிக்கலாம் என்று அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

முகநூலில் (பேஸ்புக்) ஆபாசம், வன்முறை, பாலியல் சார்ந்த விஷ யங்கள் வெளியிடப்படுவதாகவும், அதனால் பிரச்சினைகள் எழுவதாக வும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆட்சேபனைக்குரிய கருத்துகள் என்றால் என்ன, அவற்றை எப்படி வரையறுப்பது குறித்து முகநூல் பயன்படுத்துவோரே விளக்கம் அளிக்கலாம் என்று அதன் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:

முகநூலில் எந்தளவுக்கு நிர்வாணம் மற்றும் வன்முறை களைப் பார்க்க அனு மதிக்கலாம்? நிர்வாணம் என்ற விஷயத்தில் உங்கள் அளவுகோல் என்ன? வன்முறை பற்றி உங்கள் கருத்து என்ன? கிராபிக்ஸ், அவதூறு போன்ற விஷயங்களில் ஆட்சேபனைக்குரியவை எவை. இதுபோன்ற கேள்விகள் முக நூலில் உங்கள் பங்களிப்பை அதிகரிக்க செய்ய தொடர்ந்து அவ்வப்போது கேட்கிறோம். முகநூல் பயன்படுத்துவோர் இவற்றுக்கு பதில் அளிக்கலாம்.

இந்தக் கொள்கைகள், எந்தெந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது, எந்தெந்த விஷயங்கள் நீக்கப்படுகின்றன என்பதை முகநூல் பயன்படுத்து வோர் புரிந்துகொள்ள உதவும். பெரும்பாலானோர் கூறும் கருத்து களின் அடிப்படையில் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொள்கைகள் வகுக்கப்படும்.

இவ்வாறு மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in