2500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்ச வாழ்ந்திருந்தால் புத்தர் ‘இந்தியர்’ என்று கூறி விரட்டியிருப்பார்: பிரதமர் ரணில் விமர்சனம்

2500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்ச வாழ்ந்திருந்தால் புத்தர் ‘இந்தியர்’ என்று கூறி விரட்டியிருப்பார்: பிரதமர் ரணில் விமர்சனம்
Updated on
1 min read

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்த ராஜபக்ச வாழ்ந்திருந்தால் இலங்கையில் புத்த மதம் தழைத்திருக்காது என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு அருகேயுள்ள மொரட்டுவ நகரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று மஹிந்த ராஜபக்ச தரப்பினர் கூறுகின்றனர். நல்லவேளை 2500 ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்தவும் அவரது ஆதர வாளர்களும் வாழவில்லை.

தபஸ்சு பல்லுக என்ற பவுத்த துறவி புத்தரின் முடி மற்றும் இதர பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்த நேரத்தில் மஹிந்த இருந்திருந்தால் விரட்டி அடித்திருப்பார். கவுதம புத்தர் இந்தியர் என்று கூறி அவரை யும்கூட விரட்டியிருப்பார்கள்.

இந்தியா சரியில்லை, தமிழ், முஸ்லிம் மக்கள் சரியில்லை என்று கூறி இனவாதத்தை தூண்டு வதற்கு ராஜபக்ச குழுவினர் முயற்சி மேற்கொள்கின்றனர். அதை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். அதற்கேற்ப அரசு செயல்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in