ஹார்முஸ் ஜலசந்தியில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி - உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி - உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈ​ரான்​ - அமெரிக்க, இஸ்​ரேல் போர் நடந்து வருவ​தால் ஹார்முஸ் ஜலசந்தி​யில் 2 ஆயிரம் கப்​பல்​கள் 20 ஆயிரம் மாலுமிகளு​டன் தவித்து வரு​கின்​றன. கப்பல்களின் கையிருப்​பில் உள்ள உணவு, குடிநீர் குறைந்து வரு​வ​தால் அவர்​களுக்கு இக்​கட்​டான சூழல் ஏற்பட்​டுள்​ளது.

ஈரான் - அமெரிக்க, இஸ்​ரேல் கூட்​டுப் படைகளுக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்தி வழியே செல்லும் கச்சா எண்​ணெய் கப்​பல்​களை ஈரான் முடக்கியுள்​ளது. இந்த ஜலசந்​தி​யில் ஏராள​மான கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. ஈரானின் அனு​மதி பெறும் கப்பல்கள் மட்​டுமே இந்த ஜலசந்​தி​யைக் கடந்து வெளிநாடு​களுக்​குச் செல்​கின்​றன.

இந்​நிலை​யில் ஈரானின் முடக்​கம் காரண​மாக ஜலசந்தியில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கப்​பல்​கள், 20 ஆயிரத்​துக்கு மேலான மாலுமிகளு​டன் தவித்து வருவதாகத் தெரிய​வந்​துள்​ளது. மேலும் கப்​பல்​களில் உள்ள உணவு, குடிநீர் போன்​றவை குறைந்து வரு​வ​தால் அவர்​கள் இக்​கட்​டான சூழலுக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

இதையடுத்து தங்​களுக்கு உதவி கேட்டு அவர்​கள் இ-மெயிலை தாங்​கள் சார்ந்த நிறு​வனங்​களுக்​கும், நாடுகளுக்​கும் அனுப்பி வரு​கின்​றனர். இ-மெயி​லில் உதவி கப்​பல்​களில் உள்ள ஊழியர்​களுக்கு உடனடி​யாக உணவு, குடிநீர், அடிப்​படைத் தேவை​களை பூர்த்தி செய்​யு​மாறு அந்த இ-மெயி​லில் உதவி கோரப்​பட்​டுள்​ளது.

இதை சர்​வ​தேச போக்​கு​வரத்து தொழிலா​ளர்​கள் சம்​மேளனத்​தின் (ஐடிஎஃப்) கடற்​பயணி​கள் ஆதர​வுக் குழு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து ஐடிஎஃப்​பின் நிர்​வாகி முகமது அர்​ராசேடி கூறும்​போது, “இங்கு அசா​தா​ரண​மான சூழல் நில​வு​கிறது. தங்​களுக்கு தேவை​யான உணவு, குடிநீர் கிடைக்​குமா என கப்​பல் மாலுமிகள் அவதிப்​பட்டு வரு​கின்​றனர். இதனால் அவர்​களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்​களுக்​குத் தேவை​யான உதவியை ஈரான் உள்ளிட்ட நாடு​கள்​ வழங்​க வேண்​டும்​’’ என்​றார்​.

ஹார்முஸ் ஜலசந்தியில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி - உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு
‘மக்களவை இடங்களை 50% அதிகரிக்கும் திட்டத்தால் தெற்கு, மேற்கு மாநிலங்களுக்கு பாதிப்பு’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in