கொரியாவில் குவிக்கப்படும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

கொரியாவில் குவிக்கப்படும் அமெரிக்க போர்க்கப்பல்கள்
Updated on
1 min read

வடகொரியாவின் அச்சுறுத்தல் களைச் சமாளிக்க கொரிய தீப கற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பல் கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 8-ம் தேதி சிரியாவின் விமானப் படைத் தளத்தைக் குறிவைத்து அமெரிக்க கடற்படை ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதேபோல வடகொரியா மீதும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் வடகொரியா 6-வது முறையாக அணுஆயுத சோதனை நடத்த திட்டமிட்டிருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க்கப்பல் தலைமையில் ஏராளமான சிறிய ரக போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே கொரியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. சீனாவின் சிறப்பு பிரதிநிதி கிம் ஹாங் குவான், சியோலில் நேற்று தென்கொரிய மூத்த அதிகாரி டாவேவை சந்தித்துப் பேசினார். இருவரும் வடகொரியா நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in