ட்ரம்பின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா

ட்ரம்பின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 71 -வது பிறந்தநாளை இந்து சேனா டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடியுள்ளது.

அவரின் 71-வது வயதைக் குறிக்கும் வகையில் ஜூன் 14-ம் தேதி 7.1 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு, அவரின் புகைப்படத்துக்கு ஊட்டப்பட்டது. அத்துடன் ட்ரம்பின் இளமைக்கால புகைப்படங்களுக்கு குங்குமம் இடப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்து சேனா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் ட்ரம்ப் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறந்தநாள் முதல்முறையாகக் கொண்டாடப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு ஜூனிலும் இத்தகைய விழாவை இந்து சேனா கொண்டாடியது.

மே 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற, இந்து சேனா சில சடங்குகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டக் காணொலி

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in