

பின்லாந்து நாட்டின் ரொவானியெமியில் ஐபேட் ஒன்றின் பேட்டரி தீப்பிடித்து எரிந்ததால் போன் கடையிலிருந்து வாடிக்கையாளர்கள் அவசமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, புதனன்று வாடிக்கையாளர் ஒருவர் போன் கடைக்குச் சென்று 2 ஆண்டு பழைய ஐபேட் பேட்டரியை மாற்றக்கோரினார்.
அப்போது கடைக்காரர் பேட்டரியை மாற்றும் போது திடீரென பேட்டரி தீப்பிடித்தது. இதன் புகை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸிற்கும் பரவியது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.