விசா மோசடி வழக்கில் தேவயானி பதில் மனு தாக்கல்

விசா மோசடி வழக்கில் தேவயானி பதில் மனு தாக்கல்
Updated on
1 min read

தனக்கு எதிரான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்: தன் மீதான குற்றச்சாட்டு, தனக்கு முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும், முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். மான்ஹாட்டன் நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பஹாரா, கோப்ரகடே மீதான குற்றச்சாட்டு பதிவதை நிறுத்தக் கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in