நோபல் பரிசை பெற்றுக் கொண்டார் பாப் டைலன்

நோபல் பரிசை பெற்றுக் கொண்டார் பாப் டைலன்
Updated on
1 min read

அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் பாப் டைலன், சில மாதங்களுக்குப் பிறகு நோபல் பரிசை பெற்றுக் கொண்டார்.

கடந்த அக்டோபரில் நோபல் பரிசு அறி விக்கப்பட்டது. இதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க இசைக் கலைஞர் பாப் டைலன் தேர்வு செய்யப் பட்டார். கடந்த டிசம்பரில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பாப் டைலன் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து நோபல் பரிசை ஜூன் 10-க்குள் பாப் டைலன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதனை வழங்கி வரும் சுவீடன் அகாடமி எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் பாப் டைலனின் இசைக் கச்சேரி நேற்று முன்தினம் நடைபெற்றது. பின்னர் நடந்த எளிய விழாவில் அவர் நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in