ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம்

ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம்
Updated on
1 min read

உலகின் பாதுகாப்பான நாடான ஜப்பானில்  மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட இருவர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள், “ஜப்பானின் தலை நகர் டோக்கியோவிலிருந்து 13 கிலோ மீட்டருக்கு அப்பால்  கவசாகி  நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதலில்  சிறுமி உட்பட இரண்டு பேர் பலியாகினர்.

15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பள்ளி மாணவர்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் தன்னை கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஜப்பானில் சுற்றுப் பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in