இந்தோனேசிய முதியோர் இல்ல தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

இந்தோனேசிய முதியோர் இல்ல தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

Old Age Home

Updated on
1 min read

மனாடோ: இந்​தோனேசி​யா​வில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை மாலை ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 16 முதியவர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து வடக்கு சுல​வேசி காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் அலாம்​சியா ஹசிபு​வான் நேற்று கூறிய​தாவது: இந்தோனேசி​யா​வின் சுல​வேசி மாகாணத்​தில் உள்ள மனாடோவில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை இரவு தீவிபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு தூங்​கிக்​கொண்டிருந்த 16 முதி​ய​வர்​கள் உடல் கருகி உயி​ரிழந்​தனர். உயிர்பிழைத்த 15 முதி​ய​வர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

உயி​ரிழந்த முதி​ய​வர்​களின் உடல்​கள் குடும்​பத்​தினரின் உதவியுடன் அடை​யாளம் காண்​ப​தற்கு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளன. அரு​கில் உள்​ளவர்​கள் கொடுத்த தகவலை​யடுத்து 6 தீயணைப்பு வாக​னங்​கள் வரவழைக்​கப்​பட்டு தீயை அணைக்க இரண்டு மணி நேரத்​துக்​கும் மேலானது.

ஆரம்​ப கட்ட விசா​ரணை​யின்​படி மின் கசி​வின் காரண​மாக இந்த தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இருப்​பினும், இறுதி விசா​ரணைக்கு பிறகே உண்​மை​யான காரணம் தெரிய​வரும். இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

இந்தோனேசிய முதியோர் இல்ல தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி: உதயநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in