சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி: உதயநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை

சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி: உதயநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில், இந்​திய, சர்​வ​தேச இளை​யோர் பாய்​மரப் படகுப்​போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 மற்​றும் டிரை​யத்​லான் சென்னை - 2026 போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதற்கான முன்​னேற்​பாட்டு பணி​கள் குறித்து துணை முதல் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று ஆலோசனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: சர்​வ​தேச இளை​யோர் பாய்மர படகுப் போட்டி சாம்​பியன்​ஷிப் 2026 போட்​டியையொட்​டி, சென்​னை​யில் ஜன.6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பல்​வேறு வகையி​லான படகுப்​போட்​டிகள், பாய்​மரப் பலகை சறுக்கு போட்​டிகள் நடத்​தப்பட உள்​ளன.

இப்​போட்டிகளில் இந்​தி​யா, அயர்​லாந்​து, சீசெல்​ஸ், மொரீசி​யஸ், ஈராக், ஐக்​கிய அரபு எமிரேட்​ஸ், அல்​ஜீரி​யா, இலங்​கை, மலேசி​யா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்​றும் இங்​கிலாந்து ஆகிய 13 நாடு​களைச் சேர்ந்த விளை​யாட்டு வீரர்​கள் கலந்​து​கொள்ள உள்​ளனர்.

இது​வரை பாய்​மரப் படகுப்​போட்​டிகளை தொலைக்​காட்​சிகளில் மட்​டுமே பார்த்து ரசித்த சென்னை மக்​களுக்​கும் இந்​திய ரசிகர்​களுக்​கும் இந்த போட்டி நீங்​காத நினை​வு​களை அளிக்​கும்.

அதே​போல், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் சார்​பில் நடத்​தப்​படும் டிரை​யத்​லான் சென்னை - 2026 போட்​டியையொட்டி 1.50 கி.மீ நீச்​சல், 40 கி.மீ சைக்​கிளிங், 10 கி.மீ ஓட்​டம் என மொத்​தம் 51.50 கி.மீ தூரம் கொண்ட இரும்பு மனிதன் டிரை​யத்​லான் சென்னை போட்டி ஜன.10 மற்​றும் 11-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இந்​தப் போட்​டிகளில் 1,200-க்​கும் மேற்​பட்ட இந்​திய மற்​றும் சர்​வ​தேச விளை​யாட்டு வீரர்​கள் பங்​கேற்க பதிவு செய்​துள்​ளனர். இந்த இரண்டு போட்​டிகளை​யும் சிறப்​பாக நடத்​தும் வகை​யில் போக்​கு​வரத்​து, பாது​காப்​பு, அவசர மருத்​துவ சேவை​கள், தங்​குமிட வசதி, வீரர்​களுக்​கான போக்​கு​வரத்து ஏற்​பாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு முன்​னேற்​பாடு பணி​களை விரைந்து மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இக்​கூட்​டத்​தில் தலை​மைச் செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்​ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்​.

சர்வதேச இளையோர் பாய்மர படகுப் போட்டி: உதயநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை: பழனிசாமி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in