வங்க தேசத்தில் பயங்கர தீ விபத்து: 19 பேர் பலி; பலர் காயம்

வங்க தேசத்தில் பயங்கர தீ விபத்து: 19 பேர் பலி; பலர் காயம்
Updated on
1 min read

வங்கதேச தலைநகரம் டாக்காவில் அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''டாக்காவில் உள்ள பனானியில் நடந்த அலுவலகக் கட்டிடம் ஒன்றின் 9-வது மற்றும் 10-வது தளத்தில்  தீ  விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பலியாகினர். பலர் தீ க்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது நிலைமை சீராக உள்ளது'' என்று  தெரிவித்துள்ளனர்.

தீ  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாக்காவில் மோசமான கட்டிட அமைப்பு முறையால் தொடர்ந்து தீ  விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவின் பழைய தாக்காவில் உள்ள சவுக் பஜார் குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in