

பாகிஸ்தானில் அரசியல் தலைமை ஒற்றுமையுடன் இருக்கிறது. ஆனால் இந்தியா பிரிந்து காணப்படுகிறது என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் அசாத் உமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “ நாட்டை பாதுகாப்பதுதான் ராணுவத்தின் தலைமை பண்பு. ஆனால் அரசியல்வாதிகளின் தலைமைப் பண்பு என்பது நாட்டில் அத்தகைய சூழலை ஏற்படுத்தாமல் இருப்பது. நான் கடந்த 72 மணி நேரங்களாக நடந்தவைகள் குறித்து பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானின்அரசியல் தலைமை ஒற்றுமையை காண்பித்துள்ளது. ஆனால் இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பிரிந்துள்ளனர். பாகிஸ்தானியர்களிடம் எந்த பிரிவும் இல்லை.
புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடிப்பு என்று இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.