செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னைப் பிரதமராக்குமாறு போராடிய நபர்: மிமிக்ரி கலைஞர் மூலம் கீழே இறங்க வைக்கப்பட்ட ருசிகரம்

செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னைப் பிரதமராக்குமாறு போராடிய நபர்: மிமிக்ரி கலைஞர் மூலம் கீழே இறங்க வைக்கப்பட்ட ருசிகரம்
Updated on
1 min read

இஸ்லாம்பாத்தில் செல்போன் டவரில் ஏறிய நபர் தன்னைப் பிரதமராக்குங்கள் என்றும் பிரதமரானால் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன், 6 மாதங்களில் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுவேன் என்றும் கூப்பாடு போட்டது பரபரப்பானது.

இவர் யார், என்ன என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சர்கோதா என்ற ஊரைச்சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தான் கொடியை ஏந்தியபடி இவர் செல்போன் டவரின் மீது ஏறி இவ்வாறு கூச்சலிட்டதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

கீழே இறங்குமாறு இவரிடம் மன்றாடிய போது, தான் பிரதமர் இம்ரான் கானிடம்தான் பேசுவேன் அல்லது சர்கோதா போலீஸ் உயரதிகாரி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உள்ளூர் போலீஸார் சாதுரியமாக ஒரு காரியம் செய்தனர்.  மிமிக்ரிக்கு பெயர் பெற்ற காமெடி கலைஞர் ஷஃபாத் அலி என்பவரை தொடர்பு கொண்டு பிரதமர் இம்ரான் கான் போல் பேசுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் பேசியுள்ளார், அவர் பேசப்பேச திருப்தியடைந்த அந்த நபர் செல்போன் டவரிலிருந்து இறங்கினார்.

கீழே இறங்கியவுடன் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in