

ஹாலிவுட் படங்களில் நிகரான காட்சி ஒன்றை கலிபோர்னியாவில் பற்றி ஏரியும் காட்டுத் தீகளுக்கு இடையே பதிவு செய்து இருக்கிறார் பெண் ஒருவர்.
கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத வகையில் கடும் காட்டுத் தீ கடந்த வாரத்தில் ஏற்பட்டது. இதில் 42 பேர் பலியாகினர். 200க்க்கும் மேற்பட்டடோர் மாயமாகி உள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத் தீயிக்கு இரையாகி உள்ளன. மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள மலிபு நகரில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு இடையே தனது காரை ஓட்டி வந்த ரெப்பெக்கா என்ற பெண் காட்டு தீக்கு இடையே கடந்து வந்த தனது அனுபவத்தை பகிர்திருக்கிறார்.
ஹாலிவுட் காட்சிகளுக்கு நிகராக இருக்கும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ தற்போதுவரை 10 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.