

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யான 72 மணி நேர போர் நிறுத்தம் 2-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது. இதனிடையே எகிப்து தலைமையிலான பேச்சு வார்த்தையில் இந்தப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
எகிப்து மத்தியஸ்தர்கள் இஸ்ரேல்- பாலஸ்தீன தரப்பினரி டையே பேச்சுவார்த்தை நடத்த வுள்ளனர். காஸாவைக் கட்டுப் பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். இதில் இஸ்ரேல் தரப்பில் பங்கேற்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
காஸாவைப் புனரமைக்க சர்வதேச நிதியுதவி கோருதல், அதனை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு கண்காணித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஹமாஸ் முன்வைக்கும் எனத் தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக் கான சர்வதேச பிரதிநிதியும், பிரிட்டன் முன்னாள் பிரதமரு மான டோனி பிளேர் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இதற்காக அவர், எகிப்து வெளியுறவு அமைச் சர் மற்றும் அரபு லீக் அதிகாரி களை புதன்கிழமை சந்தித்தார்.
காஸாவில் இயல்பு நிலை
72 மணி நேர போர் நிறுத்தத் தால் காஸா மக்கள் அச்சமின்றி வீதிகளில் நடமாடி வருகின்றனர். குண்டு வீச்சால் சேதமடைந்த தங்களின் வீடுகளைப் பார்வை யிடுகின்றனர்.
ஏடிஎம்களில் பணம் எடுக்க மக்கள் வரிசையாக நிற்கின் றனர். வீட்டுக்குத் தேவையான பொருள்களைச் சுமந்தபடி மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
தொலைபேசி இணைப்புகள், மின் இணைப்புகளைச் சீரமைக் கும் பணி நடந்து வருகிறது. காஸா வின் ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையமும், இஸ்ரேல் தாக்கு தலில் மிக மோசமாகச் சேதமடைந் துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்ட காஸா எல்லையைத் திறக்க, இந்தப் போர் அவசியமானதுதான். இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்’ என்று காஸா மக்களில் ஒரு பகுதியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.