இஸ்ரேல், பாலஸ்தீன அமைதிப் பேச்சு தொடக்கம்

இஸ்ரேல், பாலஸ்தீன அமைதிப் பேச்சு தொடக்கம்
Updated on
1 min read

இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள் இடையே எகிப்து தலைநகர் கெய்ரோ வில் அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தொடங்கியது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

இந்நிலையில் எகிப்து அரசின் ஏற்பாட்டின் பேரில் கெய்ரோவில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தாதவரை பேச்சு வார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என்று இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், சர்வ தேச நெருக்கடி காரணமாக பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் தூதர் ஒருவர் கூறியபோது, எகிப்தில் இப்போது பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளது. இந்த முயற்சி தோல்வி அடைந்தால் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஐ.நா. வரவேற்பு

காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியபோது, 3 நாள் போர் நிறுத்தம் மேலும் நிரந்தரமாக வேண்டும், அதற்கான முயற்சிகளில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது, இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்பாடு எட்டுவதற்கு ஐ.நா. உதவ தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in