குவைத்தில் முதல்முறையாக இந்தி மொழி வானொலி சேவை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது. குவைத்தில் முதல்முறையாக இந்தி வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. குவைத் வானொலியில் எஃப்.எம். 93.3 மற்றும் ஏ.எம். 96.3 ஆகிய அலைவரிசைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப குவைத் தகவல் தொடர்பு அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கையை இந்திய தூதரகம் பாராட்டுகிறது.

இதன் பொருட்டு முதல் நிகழ்ச்சி கடந்த 21 ஏப்ரல் அன்று இரவு 8:30 முதல் 9 மணி வரை ஒலி பரப்பு செய்யப்பட்டது. இந்த முன்னெடுப்பு இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்தும். இவ்வாறு எக்ஸ் பதிவில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. .

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். குவைத்தில் வாழும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பவர்கள் இந்தியர்களே என்கிறது அந்நாட்டின் இந்திய தூதரகம்.

இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து குவைத்தில் குடியேறியவர்களில் பலர் பொறியாளர்கள், மருத்துவர்கள், பட்டயகணக்காளர்கள், விஞ்ஞானிகள், மென்பொருள் நிபுணர்கள், கட்டிடக்கலைஞர்கள், செவிலியர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in