

பிரான்ஸ் நாட்டு நிதித்துறை அமைச்சராக இருந்தபோது ஊழலுக்கு துணை போனதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டின் லாகார்ட் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாரீஸில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து அவரிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
2008-ம் ஆண்டில் பிரான்ஸ் நிதியமைச்சராக இருந்தபோது ரூ.3 ஆயிரம் கோடி நிதியை கையாளுவதில் கவனக்குறைவாக இருந்ததாகவும், முறைகேடுக்கு துணைபோனதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகின் அதிகாரம்மிக்க பெண்களில் முதலிடத்தில் இருக்கும் கிறிஸ்டின் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவர் ஐஎம்எப் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.