24 ஆண்டுகள் உறையவைக்கப்பட்ட கருவின் மூலம் குழந்தையைப் பிரசவித்த அமெரிக்கப் பெண்

24 ஆண்டுகள் உறையவைக்கப்பட்ட கருவின் மூலம் குழந்தையைப் பிரசவித்த அமெரிக்கப் பெண்
Updated on
1 min read

24 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட கருவின் மூலம் பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாக்ஸ்வெல்லே நகரில் அமைந்துள்ள தேசிய கரு நன்கொடை மையம்தான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அம்மையத்தின் இயக்குநர் கூறும்போது, "சுமார் 24 ஆண்டுகள் உறையவைக்கப்பட்ட கருவை டீனா ஜிப்சன் என்ற பெண்ணுக்கு உட்செலுத்தினோம். டீனா மற்றும் அவரது கணவரின் மரப்பணு பண்புகள் அடிப்படையில்தான் அந்தக் கரு தேர்ந்தெடுக்கப்பட்டு செலுத்தப்பட்டது. ஆனால் அவர்களிடம் அந்தக் கரு எத்தனை ஆண்டுகள் உறையவைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படவில்லை.  தற்போது அப்பெண் நவம்பர் 25-ம் தேதி  பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார். இதுவே நீண்ட ஆண்டுகள் உறையவைக்கப்பட்டு வெற்றிகரமாக பிரசவிக்கப்பட்ட கருமுட்டை என்று கருதப்படுகிறது. " என்றார்.

 இதுகுறித்து டீனா கூறும்போது, "நான் கர்ப்பமாக இருந்தவரை இந்த கரு 24 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்டது என்று மருத்துவர்கள் என்னிடம் கூறவில்லை" என்றார்.

குழந்தைக்கு எம்மா என்று பெயரிட்டுள்ளனர். ஏம்மா தனது அம்மாவை விட ஒருவயதுதான் இளையவர் என்பது இதில் கூடுதல் சுவாரசியம்.

முன்னதாக 2011 ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் 20 ஆண்டுகள் உறையவைப்பட்ட கருவின் மூலம் குழந்தையைப் பிரசவித்ததே சாதனையாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in