சோதனையைச் சாதனையாக மாற்று

சோதனையைச் சாதனையாக மாற்று
Updated on
2 min read

மனித வாழ்க்கை எங்கே தொடங்கும், எங்கே முடியும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் எவ்வாறு வாழ்கிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். வாழ்க்கை என்பது ஒரு பயணக் கப்பல் போன்றது. அந்தக் கப்பலை இயக்கும் மாலுமிகள் மாறலாம், பயணிப்பவர்கள் மாறலாம், கப்பல் மட்டும் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் வாழ்க்கையும்.

மனித வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஏற்றங்களும் இறக்கங்களும், வெற்றிகளும் தோல்விகளும் கலந்ததே வாழ்க்கை. சோதனை களும் துன்பங்களும் அவமானங்களும் நம்மைக் காயப்படுத்தவோ, கீழே தள் ளவோ வருவதில்லை. நம் மனத்தை மேலும் உறுதிப்படுத்தவும் வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளைப் புரியவும் தோல்விகள் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதனை எனும் ‘கோல்’! - சோதனைக்கும் சாதனைக் கும் உள்ள ஒரே வித்தியாசம், சாதனைக்கு முன்பிருக்கும் ஓர் எழுத்து மட்டுமே. நாம் சந்திக்கும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தரமும் திசையும் தீர்மானிக்கப்படுகிறது. தோல்வி என்பது முடிவல்ல. அது வெற்றிக்கான தொடக்கம். பலர் முதல் தோல்வியிலேயே மனம் உடைந்து போகிறார்கள். ஆனால், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இன்று உலகம் வியக் கும் பல சாதனையாளர்கள் எண்ணற்ற தோல்விகளை கடந்து வந்தவர்கள்தான்.

கால்பந்து விளையாட்டில் பந்தை உதைத்து கோல் போடுவதுபோல், நம் தடைகளையும் சோதனைகளையும் உதைத்துச் சாதனை என்னும் கோலாக மாற்ற வேண்டும். சூழ்நிலை எவ்வளவு பாதகமாக இருந்தாலும், “என்னால் முடியும்” என்கிற உள்ளார்ந்த தன்னம்பிக்கை இருந்தால் எந்தச் சவாலையும் வெல்ல முடியும், தடைகளையும் கடந்து செல்ல முடியும். தன்னம்பிக்கை இல்லாத அறிவு பயனற்றது; தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சி அதிசயங்களை நிகழ்த்தும்.

விடாமுயற்சி: முயற்சி என்பது தொடர்ச்சி யான செயல். அது ஒரு நாளிலோ, ஒரே முறை யிலோ வெற்றியைத் தராது. தொடர்ந்து முயன்றால் பெரிய மலையைக்கூடத் தகர்க்க முடியும். ‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. வெற்றியோ தோல்வியோ அதை பின்பு பார்த்துக்கொள்ளலாம், ஆனால் முயல்வதை என்றும் நிறுத்தக் கூடாது.

சில நேரம் நம் உழைப்புக்கு உடனடிப் பலன் கிடைக்காமல் போகலாம். அதற்காக முயற்சியை நிறுத்திவிடக் கூடாது. விதைத்த விதை, உடனே மரமாக மாறுவதில்லை. பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால்தான் வளரும். பெரிய ஆலமரம்கூட சிறிய விதையில்தான் பிறக்கிறது. இன்றைய சமூகத்தில் ஒப்பீடு அதிகரித்துள்ளது. உங்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்து கொள் ளாதீர்கள். உங்களின் தனித்திறன் உங்களுடையது.

ஒரு பெரிய யானையின் காதுக் குள் ஒரு சிறிய எறும்பு புகுந்து தொந்தரவு செய்ய முடியும். அதைப் போன்றுதான் திறமையும். பிறரின் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப் படுவதற்குப் பதிலாக, அதிலிருந்து ஊக்கம் பெறுவதுதான் வளர்ச்சிக்கான சரியான வழி.

இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான செய்தி ஒன்றே.தோல்விக் குப் பயப்பட வேண்டாம். முயலாததே மிகப்பெரிய தோல்வி. இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள்தான் நாளைய பெரிய மாற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும். முயற்சி தொடரும் வரை, வாழ்க்கையும் நம்மைக் கைவிடாது. உங்களால் முடியும், முயன்று வெல்லுங்கள்.

- கட்டுரையாளர், அருண்குமார் நரசிம்மன், எழுத்தாளர்; trnarunkumar@gmail.com

சோதனையைச் சாதனையாக மாற்று
‘குட்டிப் பைய’னால் நடந்தது என்ன? | அணு முதல் அண்டவெளி வரை 05

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in