

* பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களே! தேர்வு குறித்து முதலில் பயமோ பதற்றமோ வேண்டாம்.
* தேர்வு நேரத்தில் திட்டமிட்டு, பாட அட்டவணையைத் தயார் செய்து படிக்க வேண்டும். கடினமான பகுதியை முதலிலும் பின் எளிதான பகுதி என்றும் திட்டமிட வேண்டும்.
* தொலைக்காட்சி, திறன்பேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வும், அதனால் குழப்பங்கள் அதிகம் ஏற்படும். படிக்கும் நேரம் பாதிப்படையும்.
* இரவு நேரம் அதிகமாக சாப்பிடக் கூடாது. செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகும். இதனால் அதிகாலை விழிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் மந்த நிலைக்கு வழிவகுக்கும்.
* இரவு நேரம் படிப்பதைத் தவிர்த்து, அதிகாலை படிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்.
* தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ள உடற்பயிற்சி, தியானம் செய்வது நல்லது.
* அதிகக் காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழச்சாறு, மோர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* ஒரு மணி நேரம் படித்ததும் 15 நிமிடங்கள் படித்ததை நினைவுபடுத்திப் பார்க்கவும். பின் 10 நிமிடங்கள் நடைப் பயிற்சியைச் செய்துவிட்டு மீண்டும் படிக்கலாம்.
* படித்ததை எழுதிப் பார்ப்பது பத்து முறை படித்ததற்குச் சமம். இவற்றை நல்லமுறையில் பழக்கப்படுத்திக் கொண்டால் தேர்வில் உயர லாம். அனைவரும் சிறந்த மதிப்பெண் பெற்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
- பா.நூருல்லாஹ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி, மதுரை.